ONLINE FAB E CERTIFICATE TEST TERM 2 SOCIAL 1.THE PHILANTHROPISTS OF SANGAM AGE BY R GOPINATH THIRUVALLUR

பாராட்டுக்கு மயங்காத மனிதர்கள் இல்லை இதற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் என்ற வேறுபாடும் இல்லை ஆசிரியர்களே ஒரு பயிற்சி முடித்த பின் சான்றிதழ் பெறுவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர் மாணவர்களும் தாங்கள் எழுதும் தேர்வுகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்வார்கள் இதனை நன்குணர்ந்த என்னால் மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் தயாரித்து வழங்கினால் மிகவும் மகிழ்ச்சியாக கற்றலில் ஈடுபடுவார்கள் என்ற நோக்கத்தில் ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு மிகவும் எளிமையான வழி முறையில் தேர்வுகளை தயாராக உள்ளேன் என தேர்வுகளை எழுதி முடித்து 10 மதிப்பெண்ணுக்கு 8 மதிப்பெண் அதற்கு மேலும் வாங்கக்கூடிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க திட்டமிட்டு உள்ளேன் இதன் மூலம் இதுவரையில் முதல் பருவத் தேர்வில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் மின் தேர்வினை எழுதி சான்றிதழ்கள் பெற்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்கள் இதனை தொடரும் விதமாக இரண்டாம் பருவத்திற்கான அனைத்து பாடங்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலான பாடங்களுக்கும் ஆன்லைன் டெஸ்ட் பேப்பர் பயனுள்ள இதை வைத்து மாணவர்கள் ஒரு பாடத்தைப் பற்றிய முழு அறிவு பெறுவதற்கும் பாடத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சிந்தனைகளையும் அனைத்து விதமான வினாக்களையும் அனைத்து பக்கங்களில் இருந்தும் ஒரு பாடத்தில் தொகுத்து அதில் இருந்து சிறந்த 10 வினாக்களை இங்கே தேர்வுக்காக தயாரித்துள்ளேன் இந்த தேர்வினை எழுதும் போது தங்களுடைய மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை இமெயில் அட்ரஸ் வைத்திருக்கும் அனைவருக்கும் கூகுள் டிரைவ் GOOGLE DRIVE என்று ஒன்று இருக்கும் நீங்கள் தேர்வினை எழுதி முடித்த பின் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய சொல்லி ஒரு தகவல் வந்து சேரும் அதை கிளிக் செய்து நீங்கள் இந்த மின் சான்றிதழை மிகவும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதில் உங்களுடைய பெயர் நீங்கள் எழுதிய பாடத்தின் தலைப்பு எந்த வகுப்பு பயில்கிறார்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என அனைத்து விவரங்களும் அடங்கிய பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் இதனைப் பார்க்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில் தயாரிக்கிறேன் இணைந்திருங்கள் தயாரிப்பு இரா.கோபிநாத் கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு




Post a Comment

0 Comments