ICT EDUCATION TOOLS
எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி EMIS இணையதளம் மூலமாக நடத்தப்படும் பயிற்சியில் கலந்து கொள்ளும் வழிமுறைகள் வீடியோ வடிவில்
📕மிக எளிமையான விளக்கங்களுடன் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெறுவது எப்படி? வீடியோ பாருங்கள்
எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்பது எப்படி ?
எண்ணும் எழுத்து இயக்கம் - எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி பங்கேற்பாளர்கள் :
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள். பயிற்சியில் பங்கேற்பது எப்படி : TNEMIS- வாயிலாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் தங்களது USER ID மற்றும் PASSWORD மூலமாக LOGIN செய்து செய்து இணையதளம் ONLINE மூலம் பயிற்சியில் பங்கேற்றல், தொடங்குதல்.எண்ணும் எழுத்தும் அடிப்படை பயிற்சி கால அட்டவணை கட்டகம்.
1) 📗09.02.22 முதல் 12.02.22 கட்டகம் 1
2) 📕14.02.22 முதல் 19.02.22 கட்டகம் 2,3
3) 📕21.02.22 முதல் 25.02.22 கட்டகம் 4, 5 ,6
4) 📗28.02.22 முதல் 05.03.22 கட்டகம் 6,7
5) 📕07.03.22 முதல் 12.03.22 கட்டகம் 8,9
6) 📕14.03.22 முதல் 19.03.22 கட்டகம் 10, 11
7) 📗21.03.22 முதல் 25.03.22-கட்டகம் 12
8) 📕28.03.22 -அனைத்துக் கட்டகங்களில் விடுபட்டோருக்கான பயிற்சி துவக்கம்.
9) 📕09.04.22- விடுபட்டோருக்கான பயிற்சி நிறைவு.
இதில் காணொலிகள், உரை வளங்கள்(Texts) பல விதமான செயல்பாடுகள் மற்றும் ஒப்படைப்பு (Assignment)(ஒவ்வொரு பயிற்சியிலும் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
வீடியோ வடிவில் வழங்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் ஆசிரியர்கள் படித்து கட்டகத்தை 100% நிறைவு செய்ய வேண்டியது அவசியம்.
🛑மிக கவனம் : ஒவ்வொரு கட்டகத்தின் முடிவில் ஆசிரியர்கள் ஒரு கொள்குறி வகை(Multiple choice) வினாடி-வினாவிற்கு விடை அளிக்க வேண்டும். மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
❌⭕தேர்ச்சி பெறவில்லை எனில் மீண்டும் பயிற்சி எடுத்துக்கொண்டு தேர்ச்சி பெறும் வரையில் பயிற்சியினை தொடர்தல் வேண்டும்.
🗞️📕சான்றிதழ் : பயிற்சியில் பங்கேற்று சான்றிதழை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
📕அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறு வளமையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து 100% இலக்கினை அடைய வழிவகை செய்ய வேண்டும்.
📕FLN (Foundational Literacy and Numeracy) எனப்படும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கான அறிவிப்பு;
📗அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி TNEMIS இணையதளத்தின் மூலம் கடிதத்தில் உள்ளவாறு (09-02-2022) முதல் வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து ஆசிரியர்களும், TN EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் Individual User ID, Password னை பயன்படுத்தி மேலே உள்ள கடிதத்தில் கூறியுள்ள கால அட்டவணைப்படி பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
📕பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஆசிரியர்கள் TN EMIS இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள 12 கட்டகங்களின் செயல்பாடுகளையும் கடித்த்தில் குறிப்பிடபட்டுள்ள தேதிக்குள் கூறியுள்வாறு முடிக்கப்பட வேண்டும்
தயாரிப்பு
இரா.கோபிநாத்
அறிவியல் ப.ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி வெ.கண்டிகை
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
☎️ 9578141313
0 Comments