EMIS PROMOTION PROCEEDINGS DOWNLOAD DETAILED PROMOTION VIDEO IN MOBILE AND COMPUTER

HOW TO GIVE PROMOTION TO STUDENTS IN EMIS USING COMPUTER WITH DETAILED VIDEO

HOW TO GIVE PROMOTION TO STUDENTS IN EMIS USING MOBILE

எமிஸ்‌ தளத்தில்‌ தேர்ச்சி வழங்குவதற்கான 

பொதுவான வழிமுறைகள்‌


முதலில்‌ பள்ளியில்‌ இறுதி வகுப்பு ( மேல்நிலைப்பள்ளியில்‌ பத்தாம்‌ வகுப்பு, பன்னிரண்டாம்‌ வகுப்பு/ உயர்நிலைப்பள்ளியில்‌ பத்தாம்‌ வகுப்பு / நடூநிலைப்பள்ளியில்‌ எட்டாம்‌ வகுப்பு 7 / துவக்கப்பள்ளியில்‌ ஐந்தாம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களது விபரங்கள்‌ மற்றும்‌ பள்ளி மாறுதல்‌ காரணமாக மாற்றுச்‌ சான்றிதழ்‌ கோரிய இதர வகுப்பு மாணவர்களது விபரங்கள்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ தயார்‌ செய்யப்பட்டு, COMMON POOLக்கு அனுப்பப்பட்டு இருக்க வேண்டும்‌.

மேற்கண்ட பணி முடிக்கப்பட்டதை உறுதி செய்த பின்பு, பள்ளியின்‌ எமிஸ்‌ தளத்தில்‌  Schools --> Class and Sections வாயிலாக தங்கள்‌ பள்ளியில்‌ உள்ள அனைத்து வகுப்புகள்‌ / பிரிவுகள்‌ சரியாக உள்ளதையும்‌, ஒவ்வொரு வகுப்பு பிரிவிற்கான Medium & Group code சரியாக உள்ளதையும்‌ கட்டாயம்‌ உறுதிப்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. வலது புற மேல்‌ பக்கத்தில்‌ உள்ள +ADD வாயிலாக தேவைப்படின்‌ புதிய பிரிவுகளை (Sections) உருவாக்கிக்கொள்ளலாம்‌.


எமிஸ்‌ தளத்தில்‌ தேர்ச்சி வழங்கும்‌ போது இறங்கு வரிசைமுறையில்‌ (11,9,8,7,6,5,4,3,2,1,UKG,LKG) வகுப்புகளைத்‌ தேர்வு செய்து தேர்ச்சி வழங்குதல்‌ வேண்டும்‌.

அதற்கு பள்ளியின்‌ எமிஸ்‌ தளத்தில்‌ Students --> Students Promote வாயிலாக தங்கள்‌ பள்ளி மாணவர்களுக்கு கீழ்க்கண்ட படத்தில்‌ காட்டப்பட்டூள்ளவாறு வகுப்பு / பிரிவினைத்‌ தேர்வு செய்து,  Get Student list மூலம்‌ மாணவர்களின்‌ பெயர்‌ பட்டியலை பெற்றவுடன்‌, அம்‌ மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படும்‌ அடுத்த உயர்‌ வகுப்பு பிரிவினை தேர்வு செய்து  >> என்பதை கிளிக்‌ செய்தவுடன்‌ மாணவர்களது பெயர்கள்‌ அடுத்த உயர்‌ வகுப்பு பிரிவிற்கான பட்டியலில்‌ தோன்றும்‌, அதனைத்‌ தொடர்ந்து Promote என்பதை தேர்வு செய்தபின்‌ Are you sure want to promote Students? என்ற வினாவிற்கு Yes என தேர்வு செய்வதன்‌ மூலம்‌ குறிப்பிட்ட வகுப்பு பிரிவிற்கு தேர்ச்சி வழங்கும்‌ பணியானது நிறைவுபெறும்‌.


ஒரு வகுப்பு பிரிவிற்கான தேர்ச்சி வழங்கும்‌ பணியை முடித்த உடன்‌ Ctrl + Shift + R என்பதை கிளிக்‌ செய்து அப்பக்கத்தினை refresh செய்து கொள்ளுதல்‌ வேண்டும்‌. இதே வழிமுறையை பின்பற்றி ஏனைய பிற வகுப்பு/பிரிவிற்கும்‌ தேர்ச்சி வழங்கு
தல்‌ வேண்டும்‌.

ஒரு வகுப்பு பிரிவில்‌ உள்ள மாணவர்களை அடுத்த உயர்‌ வகுப்பு தேர்ச்சி அளிக்கும்போது இரு வெவ்வேறு பிரிவுகளுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டி இருப்பின்‌, முதலில்‌ உதாரணமாக B பிரிவிற்கு தேர்ச்சி அளிக்கவேண்டிய மாணவர்களது பெயர்களை மட்டும்‌ கீழ்க்காணும்‌ படத்தில்‌ தேர்வு செய்துள்ளதைப்‌ போன்று தேர்வு செய்தபின்‌, தேர்ச்சி அளிக்க வேண்டிய அடுத்த உயர்‌ வகுப்பு பிரிவினை :“...” பூர்த்தி செய்து    >   என்பதை கிளிக்‌ செய்தவுடன்‌ மாணவர்களது பெயர்கள்‌ அடுத்த உயர்‌ வகுப்புபிரிவிற்கான பட்டியலில்‌ தோன்றும்‌, பின்பு Promote என்பதை தேர்வு செய்து தேர்ச்சி அளிக்கலாம்‌. இதே வழிமுறையைப்பின்பற்றி தேவையான பிரிவிற்கு தேர்ச்சி அளிக்கலாம்‌.

மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும்‌ பணி முடிக்கப்பட்டபின்பு Schools --> Class and Sectionsல்‌ மாணவர்கள்‌ பதிவு இன்றி ஏதேனும்‌ பிரிவுகள்‌ (Sections) இருப்பின்‌ அதனை delete செய்திடல்‌ வேண்டும்‌.

மேல்நிலைப்பள்ளிகளில்‌ (Higher Secondary Schools)

Step 1: கடந்த கல்வியாண்டில்‌ (2021-2022) பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டூ பயின்ற மாணவர்களுக்கு எமிஸ்‌ தளத்தில்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ தயார்‌ செய்து, அம்மாணவர்களது விபரங்களை COMMON POOLகு அனுப்பிய பின்பே, (அதாவது EMIS School loginல்‌ 10,12ஆம்‌ வகுப்புகளில்‌ எந்த ஒரு மாணவரது பதிவும்‌ இருத்தல்‌ கூடாது) / மற்ற வகுப்புகளில்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ கோரும்‌ பெற்றோரின்‌ கோரிக்கைக்கிணங்க மாற்றுச்‌ சான்றிதழ்களை எமிஸ்‌ இணையதளம்‌ வாயிலாக தயார்‌ செய்து வழங்கிய பின்பே, Promotion வழங்கும்‌ பணியை தொடங்குதல்‌ வேண்டும்‌.

Step 2: கடந்த கல்வியாண்டில்‌ 11ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 3: கடந்த கல்வியாண்டில்‌ 9ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 4: கடந்த கல்வியாண்டில்‌ 8ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 5: கடந்த கல்வியாண்டில்‌ 7ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 6: கடந்த கல்வியாண்டில்‌ 6ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

உயர்நிலைப்பள்ளிகளில்‌ (High Schools),

Step 1: கடந்த கல்வியாண்டில்‌ (2021-2022) பத்தாம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு எமிஸ்‌ தளத்தில்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ தயார்‌ செய்து, அம்மாணவர்களது விபரங்களை COMMON POOLற்கு அனுப்பிய பின்பே, (அதாவது EMIS School loginல்‌ 10ஆம்‌ வகுப்புகளில்‌ எந்த ஒரு மாணவரது பதிவும்‌ இருத்தல்‌ கூடாது) / மற்ற வகுப்புகளில்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ கோரும்‌ பெற்றோரின்‌ கோரிக்கைக்கிணங்க மாற்றுச்‌ சான்றிதழ்களை எமிஸ்‌ இணையதளம்‌ வாயிலாக தயார்‌ செய்து வழங்கிய பின்பே, PROMOTION வழங்கும்‌ பணியை தொடங்குதல்‌ வேண்டும்‌.

Step 2: கடந்த கல்வியாண்டில்‌ 9ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 3: கடந்த கல்வியாண்டில்‌ 8ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 4: கடந்த கல்வியாண்டில்‌ 7ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 5: கடந்த கல்வியாண்டில்‌ 6ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

நடுநிலைப்பள்ளிகளில்‌ (Middle Schools)

Step 1: கடந்த கல்வியாண்டில்‌ (2021-2022) எட்டாம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு எமிஸ்‌ தளத்தில்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ தயார்‌ செய்து, அம்மாணவர்களது விபரங்களை COMMON POOLற்கு அனுப்பிய பின்பே, (அதாவது EMIS School loginல்‌ 8ஆம்‌ வகுப்புகளில்‌ எந்த ஒரு மாணவரது பதிவும்‌ இருத்தல்‌ கூடாது) / மற்ற வகுப்புகளில்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ கோரும்‌ பெற்றோரின்‌ கோரிக்கைக்கிணங்க மாற்றுச்‌ சான்றிதழ்களை எமிஸ்‌ இணையதளம்‌ வாயிலாக தயார்‌ செய்து வழங்கிய பின்பே, Promotion வழங்கும்‌ பணியை தொடங்குதல்‌ வேண்டும்‌.

Step 2: கடந்த கல்வியாண்டில்‌ 7ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 3: கடந்த கல்வியாண்டில்‌ 6ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 4: கடந்த கல்வியாண்டில்‌ 5ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 5: கடந்த கல்வியாண்டில்‌ 4ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 6: கடந்த கல்வியாண்டில்‌ 3ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 7: கடந்த கல்வியாண்டில்‌ 2ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 8: கடந்த கல்வியாண்டில்‌ 1ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 9: கடந்த கல்வியாண்டில்‌ UKG வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 10: கடந்த கல்வியாண்டில்‌ LKG வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.


தொடக்கப்பள்ளிகளில்‌ (Primary Schools)

Step 1: கடந்த கல்வியாண்டில்‌ (2021-2022) ஐந்தாம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு எமிஸ்‌ தளத்தில்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ தயார்‌ செய்து, அம்மாணவர்களது விபரங்களை COMMON POOLற்கு அனுப்பிய பின்பே, (அதாவது EMIS School loginல்‌ 5ஆம்‌ வகுப்புகளில்‌ எந்த ஒரு மாணவரது பதிவும்‌ இருத்தல்‌ கூடாது) / மற்ற வகுப்புகளில்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ கோரும்‌ பெற்றோரின்‌ கோரிக்கைக்கிணங்க மாற்றுச்‌ சான்றிதழ்களை எமிஸ்‌ இணையதளம்‌ வாயிலாக தயார்‌ செய்து வழங்கிய பின்பே, Promotion வழங்கும்‌ பணியை தொடங்குதல்‌ வேண்டும்‌.

Step 2: கடந்த கல்வியாண்டில்‌ 4ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 3: கடந்த கல்வியாண்டில்‌ 3ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 4: கடந்த கல்வியாண்டில்‌ 2ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.

Step 5: கடந்த கல்வியாண்டில்‌ 1ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்‌.


Post a Comment

0 Comments